5 நிமிட பார்க்கிங் விதிமீறலுக்கு £11,000 அபராதம்: புதிய விதியால் வருத்தத்தில் பிரித்தானிய பெண்
பிரித்தானியாவில் உள்ள ஒரு பெண்மணி, ஐந்து நிமிட பார்க்கிங் விதியை மீறியதற்காக £11,000 அபராதம் விதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
£11,390 பவுண்ட அபராதம்
இங்கிலாந்தின் டர்ஹாம்(Durham) கவுண்டியில் உள்ள டார்லிங்டனில்(Darlington) வசித்து வரும் ஹன்னா ராபின்சன் என்ற பெண், ஃபீதம்ஸ் ஓய்வு மையம் (Feethams Leisure Centre ) என்ற இடத்தில் தனது காரை வழக்கமாக நிறுத்தும் பழக்கத்தை கொண்டிருந்துள்ளார்.
அவர் பார்க்கிங்கிற்கான தேவையான கட்டணத்தை கட்டியிருந்த போதிலும், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தலா £170 பவுண்டுகள் என சுமார் 67 அபராதங்களுக்கு மொத்தமாக £11,390 பவுண்ட்கள் அபராதங்களை குவித்துள்ளார்.
விதி மாற்றத்தால் உருவான அபராதம்
கார் பார்க்கிங் நிறுவனமான எக்செல் பார்க்கிங் சர்வீசஸ்(Excel Parking Services), பார்க்கிங்கில் கார் நுழைந்த ஐந்து நிமிடங்களுக்குள் டிக்கெட் வாங்க வேண்டும் என்ற கண்டிப்பான விதியை அறிமுகப்படுத்தியது தான் இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்த நடவடிக்கை, கட்டணம் செலுத்தாமல் வாகனத்தை நிறுத்தி செல்பவர்களை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டது.
ஹன்னா ராபின்சன் வருத்தம்
இந்நிலையில், கார் பார்க்கில் போதிய இணைய இணைப்பு இல்லாததால், பெரும்பாலும் ஒதுக்கப்பட்ட நேரத்தில் பணம் செலுத்தும் செயல்முறையை முடிக்க முடியவில்லை என்று ராபின்சன் வருத்தத்துடன் விளக்கமளித்துள்ளார்.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் இத்தகைய கண்டிப்பான பார்க்கிங் விதிமுறைகளின் நியாயத்தன்மை குறித்த கேள்விகளையும் பொதுமக்களிடம் எழுப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |