பிரித்தானியாவின் தெருக்களில் மீண்டும் அமைதி வேண்டும்! பொலிஸாருக்கு முழு அதிகாரம் வழங்கிய பிரதமர்
பிரித்தானியாவின் தெருக்களை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பொலிஸார் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் அரசு துணை நிற்கும் என பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர்(Sir Keir Starmer) தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நகரங்களில் கலவரம்
ஜூலை 29ம் திகதி பிரித்தானியாவின் Southport பகுதியில் சிறார்களுக்கான கோடைகால முகாமில் Axel Rudakubana என்ற 17 வயது பதின்பருவ சிறுவன் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், Southport, Liverpool, London மற்றும் Sunderland போன்ற பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும், அதன் தொடர்ச்சியாக வன்முறையும் வெடித்தது.
மேலும் தீவிர வலதுசாரி ஆதரவாளர் அமைப்புகள் தற்போது நாடு முழுவதும் குறைந்தது 9 நகரங்களில் இது தொடர்பான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன் அடிப்படையில், இந்த பேரணி ஆர்ப்பாட்டங்கள் மான்செஸ்டர், லிவர்பூல், நாட்டிங்ஹாம், லீட்ஸ், நியூகேஸில், மிடில்ஸ்பரோ, பெல்ஃபாஸ்ட், பிரிஸ்டல், ஹல் ஆகிய 9 நகரங்கள் பட்டியலிடப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு முழு அதிகாரம்
இந்நிலையில், பிரித்தானியாவின் தெருக்கள் கலவரகாரர்களிடம் இருந்தும், வெறுப்பு பரப்புபவர்களிடம் இருந்தும் பாதுகாப்பானதாக மீண்டும் திரும்ப பொலிஸார் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அரசு முழு ஆதரவு வழங்கும் என பிரித்தானியா பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டவுனிங் தெருவின் செய்தித் தொடர்பாளர் வழங்கிய தகவலில், கடந்த சில நாட்களாக பிரித்தானிய நகரங்களில் உள்ள தெருக்களில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர், துணை பிரதமர், உள்துறை அமைச்சர், நீதி துறை செயலாளர் உட்பட முக்கிய அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
மேலும் சுந்தர்லேண்டில் வெடித்த கலவரத்திற்கு உடனடியாக பதிலளித்த பொலிஸாருக்கு சர் கீர் ஸ்டார்மர் நன்றி தெரிவித்தார்.
அத்துடன் கலவரங்களில் காவல்துறை அதிகாரிகளை தாக்கும், உள்ளூர் வணிகங்களை நடக்க விடாமல் செய்யும் கலவரகாரர்களின் முயற்சிகளுக்கு எதிராக பொலிஸாரின் அனைத்து நடவடிக்கைக்கும் அரசு துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |