வியட்நாமில் வயிற்று வலியால் துடித்த இந்தியர்: ஆசன வாயில் விலாங்கு மீனை செலுத்தியதன் விபரீதம்
வியட்நாமில் இந்தியர் ஒருவர் தனது ஆசன வாயில் விலாங்கு மீனை செலுத்தியதன் காரணமாக கடுமையான வயிற்று வலியால் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.
விலாங்கு மீனை ஆசன வாயில் செலுத்திய மனிதர்
வியட்நாமில் வசித்து வரும் 31 வயது இந்தியர் ஒருவர் கடந்த ஜூலை 27ம் திகதி கடுமையான வயிற்று வலி காரணமாக தலைநகர் Hanoi-யில் உள்ள மருத்துவமனையை அணுகியுள்ளார்.
சோதனைக்கு பிறகு மருத்துவர்கள் வழங்கிய தகவலின் படி, சம்பந்தப்பட்ட நபர் ஒரு நாளுக்கு முன்னதாக விலாங்கு மீன் ஒன்றை தனது ஆசன வாய் வழியாக செலுத்தி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் விலங்கானது உயிர் தப்பிப்பதற்காக நோயாளியின் மலக்குடல் மற்றும் பெருங்குடலை கடித்து வயிற்றுக் குழிக்குள் நுழைந்து இருப்பதும், எக்ஸ்ரே புகைப்பட சோதனையில், அதன் எலும்புக்கூடு தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை
இதையடுத்து ஆசன வாய் வழியாக விலாங்கு மீனை அகற்றுவதற்கான முதல் கட்ட பணிகளை மருத்துவர்கள் தொடங்கிய போது, மற்றொரு அந்நிய பொருள் ஒன்றால் முயற்சி தடைப்படுவதை மருத்துவர்கள் கவனித்தனர்.
இதனால் அறுவை சிகிச்சை முறையை கையில் எடுத்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக, நோயாளியின் வயிற்று பகுதியில் இருந்து உயிருடன் 25 அங்குலம் நீளமும், 4 அங்குலம் அகலமும் கொண்ட விலாங்கு மீனை வெளியே எடுக்கப்பட்டது.
இதனுடன் எலுமிச்சை பழமும் ஒன்றும் அவரது வயிற்று குழிக்குள் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |