ஹமாஸ் தலைவர் படுகொலை: முக்கிய தகவலை வெளியிட்ட ஈரான் புரட்சிகர காவலர்கள்!
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே 7 கிலோ எடையுள்ள குறுகிய தூர ஏவுகணையால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்
இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளி குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) ஈரான் தலைநகர் Tehran வைத்து கொல்லப்பட்டார்.
ஏற்கனவே இஸ்ரேல்-பாலஸ்தீன், இஸ்ரேல்-லெபனான் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் புதன்கிழமை நடந்த இந்த தாக்குதலுக்கு பிறகு ஈரானுக்கும் அதன் பரம்பரை எதிராளியான இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் சூடுபிடித்துள்ளது.
ஈரான் புரட்சிகர காவலர்கள் தகவல்
இந்நிலையில், தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே 7 கிலோ எடையுள்ள குறுகிய தூர ஏவுகணையால்(short-range projectile with a warhead of about 7 kg) கொல்லப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவலர்கள் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஹமாஸ் தலைவரின் படுகொலைக்கான பழிவாங்கல் பதிலடி, சரியான நேரத்தில், சரியான இடத்தில் இஸ்ரேலுக்கு கொடுக்கப்படும் என்றும் ஈரானின் புரட்சிகர காவலர்கள் தெரிவித்துள்ளது.
மேலும் ஹனியே-யின் மரணத்திற்கு பயங்கரவாத சியோனிச ஆட்சியே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |