உக்ரைன் நகரை உலுக்கிய ரஷ்ய ஏவுகணைகள்! பரபரப்பு வீடியோ ஆதாரம்
உக்ரைனின் லிவிவ் நகர் மீது குரூஸ் ஏவுகணைகள் மூலம் ரஷ்ய தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் மேற்கில் உள்ள லிவிவ் நகரம் மீது ரஷ்ய இன்று 5 குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லிவிவ் நகரில் குடியிருப்பு பகுதிகளில் ஏவுகணைகள் தாக்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
One of the 5 Russian cruise missiles flying over #Lviv, prior to hitting civilian infrastructure in the city. pic.twitter.com/LQ7f4dQR0i
— Walter Lekh?? (@walterlekh) April 18, 2022
உக்ரைன் தாக்குதலில் எரிந்து கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல்! உண்மையான ஆதாரம் வெளியானது
தாக்குதலை தொடர்ந்து லிவிவ் நகரில் பல்வேறு இடங்களில் வானுயர கரும்புகை சூழ்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Footage from Lviv this morning. pic.twitter.com/YftgGlDXKA
— bigrussianshop?? (@bigrussianshop) April 18, 2022
அத்துடன், மின்னல் வேகத்தில் குரூஸ் ஏவுகணை ஒன்று லிவிவ் நகரை தாக்க பாய்ந்துச்சென்ற வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
லிவிவ் நகரம் மீதான தாக்குதலை உறுதிப்படுத்திய அந்நகர மேயர், தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.