நெஞ்சை உலுக்கும் காட்சிகள்; தடுப்புக் கம்பி உடைந்து 4-வது மாடியிலிருந்து விழுந்த மாணவர்கள்; 5 பேர் பலியான கோர சம்பவம்
பொலிவியா பல்கலைக்கழகத்தில் கூட்ட நெரிசல் காரணமாக, பால்கனியின் தடுப்புக் கம்பி உடைந்து நான்காவது மாடியிலிருந்து மாணவர்கள் கீழே விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் குறைந்தது 8 பேர் கீழே விழுந்துள்ளதாகவும், அதில் 3 மாணவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
மேற்கு பொலிவியாவில் உள்ள Public University of El Alto (PUEA) பல்கலைக்கழகத்தில், நிதி அறிவியல் துறைக் கட்டிடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
அங்கு மாணவர்கள் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கூடியிருந்தனர். இந்த கோர சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவிவருகிறது.
கோவிட் -19 தொற்றுநோய்களின் போது ஏன் இவ்வளவு மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே கூடிவந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.