உலகத்தில் இன்றுவரை தீர்க்கப்படாத 5 மர்மங்கள் என்ன தெரியுமா?
உலகம் முழுவதும் உள்ள சில மர்மங்களுக்கு இன்னும் விடை கண்டுபிடிக்கப்படாமல் தீர்க்கப்படமாலே உள்ளது.
தற்போதைய நவீன காலத்தில் பல்வேறு விடயங்களுக்கு உடனடியாக தீர்வுகள் கிடைக்கின்றன. ஆனாலும், சில விடயங்களுக்கு இன்று வரையில் தீர்வுகள் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கிறது. அவற்றை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஓக் தீவு (Oak Island)
கனடா நாட்டின் நோவா ஸ்கோட்டியா அருகே ஓக் தீவு உள்ளது. இந்த தீவானது பல நூற்றாண்டுகளாக மர்மமாகவே இருக்கிறது.
இந்த தீவுக்குள் விலைமதிக்கமுடியாத பொருள் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பொருளை மிகப்பெரிய கடற்கொள்ளையனாக இருந்த கேப்டன் வில்லியம்ஸ், ஓக் தீவில் வைத்ததாக கூறுகின்றனர். இதனால் பலரும் கண்டுபிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், இன்றுவரை இதற்கு தீர்வு கிடைக்கவில்லை.
ஜான் எஃப் கென்னடி (John F Kennedy)
அமெரிக்காவின் 35வது அதிபராக இருந்தவர் ஜான் எஃப் கென்னடி. இவரது மரணமும் மர்மமாகவே இருக்கிறது. இவரை 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி அன்று லீ ஹார்வி ஆஸ்வால்டு என்பவர் சுட்டுக்கொன்றார்.
இதையடுத்து, லீ ஹார்வி ஆஸ்வால்டு கைது செய்யப்பட்ட மறுநாளே மர்மமான நபர் ஒருவர் ஆஸ்வால்டை சுட்டு கொன்றுவிட்டார்.
இப்போது, இவர்கள் இருவரும் ஏன் கொல்லப்பட்டனர்? யாரால் கொல்லப்பட்டனர்? என்று தகவல் கிடைக்காமலே இருக்கிறது.
கிறிஸ்தவம்
உலகம் முழுவதும் கிறிஸ்தவ மதம் மிகப்பெரிய அளவில் பரவியுள்ளது. மக்கள் இயேசுவை கடவுளாக வணங்கி வருகின்றனர். ஆனால், இயேசு கிறிஸ்துவின் தோற்றம் பல மர்மங்களை உள்ளடக்கியதாக கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கிறிஸ்துவின் வீட்டை கண்டுபிடித்ததாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப இயேசுவின் தோற்றம் மாறுபட்டு காணப்படும். அதன் உண்மையான தோற்றம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
ஆர்க் ஆஃப் கன்வீனன்ட் (Ark of the Covenant)
மொத்தமாக ஜெருசலம் அழிந்தபோது ஆர்க் ஆஃப் கன்வீனன்ட் ஒரு புனிதமான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
இன்னும் சிலர் இதனை பேபிலான் இன மக்கள் அழித்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால், இதுபற்றிய உண்மை நிலவரம் தெரியவில்லை. முக்கியமாக மதங்கள் குறித்த ரகசியங்கள் அதில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தொங்கும் தோட்டம்
பேபிலான் இன மக்கள் இருந்த இடத்தில் தொங்கும் தோட்டம் இருந்ததாக கூறுகின்றனர். ஆனால், தற்போது ஈராக் இருக்கும் பகுதியில் தான் பேபிலான் இன மக்கள் இருந்துள்ளனர்.
ஆனால், இந்த இடத்தில் தொங்கும் தோட்டம் இருந்ததை தொல்லியல் ஆய்வார்கள் கண்டுபிடிக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |