என்ன ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 50,000 ரூபாயா? ஒரு சுவாரஸ்ய தகவல்...
உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்படும், அல்லது முக்கிய உணவுப்பொருட்களில் ஒன்று உருளைக்கிழங்கு. அதற்கு ஒரு முக்கிய காரணம், உருளைக்கிழங்கு குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உணவுப்பொருட்களில் ஒன்று என்பதாகும்.
ஆனால், பிரான்சில் விற்கப்படும் ஒருவகை உருளைக்கிழங்கின் விலை, கிலோ ஒன்றிற்கு 40,000 முதல் 50,000 ரூபாயாம்!
அது என்ன ஸ்பெஷல் உருளைக்கிழங்கு?
Le Bonnotte என்று அழைக்கப்படும் இந்தவகை உருளைக்கிழங்கு, பிரான்சிலுள்ள Ile De Noirmoutier என்னும் தீவில் பயிரிடப்படுகிறது. இது மிகவும் அபூர்வமான ஒன்று என்பதால், வெறும் 50 சதுர மீற்றர் நிலத்தில் மட்டுமே பயிரிடப்படுகிறது.
அதுவும், மணல்பாங்கான நிலத்தில், கடல்பாசி போன்ற உரங்களை மட்டுமே பயன்படுத்தி பயிரிடப்படுவதாலும் அவை ஸ்பெஷலாக கருதப்படுகின்றனவாம். சற்று எலுமிச்சை சுவையும் சாப்பிட்டு முடித்ததும் உப்பு மற்றும் வால்நட்ஸ் சுவையும் கொடுக்கக்கூடியது இந்த உருளைக்கிழங்கு வகை.
ஆண்டுக்கு ஒருமுறை, வெறும் கைகளால் ஒவ்வொன்றாக அறுவடை செய்யப்படும் இந்த உருளைக்கிழங்கின் தோலிலேயே வாசனையும் சுவையும் உள்ளதால், அவற்றை தோலுடன் சாப்பிடவே பரிந்துரைக்கப்படுகிறது.
மிகவும் மென்மையான இந்த உருளைக்கிழங்குகள் கைகளால் மட்டுமே பறிக்கப்படும் என்பதால், 2, 500 பேர் அவற்றை ஏழு நாட்கள் செலவிட்டு அறுவடை செய்வார்களாம்.
இன்னொரு முக்கிய விடயம், அவை கடைகளில் கிடைக்காது. இணையம் வாயிலாக ஆர்டர் செய்து மட்டுமே அவற்றை வாங்கமுடியும்!