500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்: 2024-லிலும் தொடரும் வேலை இழப்பு
அமேசானின் ட்விட்ச் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 500 பேர் விரைவில் பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடரும் ஊழியர்கள் பணிநீக்கம்
அமேசான்(Amazon) நிறுவனம் வாங்கிய ட்விட்ச்(Twitch) என்ற லைவ் ஸ்ட்ரீமிங் நிறுவனத்தில் இருந்து குறைந்தது 500 ஊழியர்களை விரைவில் அமேசான் பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையின் படி நிறுவனத்தின் ஊழியர்களில் 35% பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் ஜனவரி 10 புதன்கிழமை பணி நீக்கம் தொடர்பான அறிவிப்பு அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பணிநீக்கம் செய்யும் நிறுவனங்களில் அமேசானின் ட்விட்ச்(Twitch) நிறுவனம் இணைந்துள்ளது.
அத்துடன் ட்விட்ச் நிறுவனத்தை அமேசான் கையப்படுத்திய பிறகு நிறுவனத்தில் வணிகம் லாபகரமாக இல்லை என்றும் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
உயர் அதிகாரிகள் பதவி விலகல்
Twitch நிறுவனத்தின் தயாரிப்பு அதிகாரி, தலைமை வாடிக்கையாளர் அதிகாரி மற்றும் தலைமை உள்ளடக்க அதிகாரி உள்பட பல உயர்மட்ட அதிகாரிகள் 2023ம் ஆண்டு பதவி விலகினர்.
2023 மார்ச்சில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் க்ளான்சி பதவி விலகியது மற்றும் மற்ற உயர் அதிகாரிகள் பதவி விலகியதை அடுத்து நிறுவனம் ஆட்டம் காணத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் விளைவாகவே 500 ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய ட்விட்ச் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Amazon, Twitch, bloomberg, layoff, employees, workers, job, job opportunities, money, Google, Google news