கடந்த 24 மணி நேரத்தில் 500 ரஷ்ய வீரர்கள்: உக்ரைனில் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
போர் தாக்குதல்
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் ஓராண்டை கடந்து இருக்கும் நிலையில், சமீபத்தில் ரஷ்யா உக்ரைன் எல்லையில் கிட்டத்தட்ட 5,00,000 ராணுவ வீரர்களை குவித்து இருந்தது.
இந்த ராணுவ துருப்புகள் அதிகரிப்பை தொடர்ந்து, உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான பக்மூட்-ஐ முழுமையாக கைப்பற்ற ரஷ்ய ராணுவ துருப்புகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
Getty
இதற்கிடையில் ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராட ஆயுத உதவி வழங்க வேண்டும் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் கோரிக்கை முன்வைத்து வருகிறார்.
500 ரஷ்ய வீரர்கள்
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 500 ரஷ்ய வீரர்கள் மோதலில் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
அத்துடன் உக்ரைனிய இராணுவத்தின் பொதுப் பணியாளர்கள் சனிக்கிழமையன்று தெரிவித்த தகவலில், ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியதில் இருந்து குறைந்தது 179,320 வீரர்களை இழந்துள்ளது.
EPA
மேலும் கடந்த 7 நாட்களில் ரஷ்யா அவர்களது 7 டாங்கிகள், 10 கவச பாதுகாப்பு வாகனங்கள், 15 பீரங்கி அமைப்புகள், பல ராக்கெட் லாஞ்சர், ஒரு ஹெலிகாப்டர், 9 தந்திரோபாய அளவிலான ஆளில்லா வான்வழி வாகனங்கள், 13 டிரக்குகள் மற்றும் 5 யூனிட் சிறப்பு உபகரணங்களை இழந்ததாக தெரிவித்துள்ளது.