கனடாவில் 51 அடி உயர இராமர் சிலை திறப்பு
கனடாவில் 51 அடி உயரம் கொண்ட இராமர் சிலை திறக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 3-ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கனடாவின் மிசிசாகா நகரில் உள்ள Hindu Heritage Centre-ல் இந்த இராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

சுவர்களில் ஜேர்மன் எழுத்துக்கள்., வீட்டிற்கு அடியில் ரகசிய பதுங்குகுழியை கண்டுபிடித்த பிரித்தானிய தம்பதி
வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள இராமர் சிலைகளில் இதுவே இப்போது மிக உயரமான சிலை என கூறப்படுகிறது.
இச்சிலை இந்தியாவின் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோவிலில் உள்ள சிலையின் வடிவமைப்பில் ஈர்க்கப்பட்டு சிற்பி நரேஷ் குமார் கும்மாவத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
டெல்லியில் பல பாகங்களாக தயாரிக்கப்பட்ட இச்சிலை கனடாவின் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் வீசக்கூடிய காற்றையும் தாங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சிலையின் உயரம் மட்டும் 51 அடி எனவும், 7 அடி உயரம் கொண்ட மேடையின் அளவு சேர்க்கப்படவில்லை என்றும், மேலும், எதிர்காலத்தில் கூடுதலாக கொடையொன்று இணைக்கப்படவுள்ளதாகவும் Hindu Heritage Centre தெரிவித்துள்ளது.
10,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட சிலையின் திறப்பு விழாவில் பேசிய மிசிசாகா மேயர் கரோலின் பாரிஷ், இது கனடாவில் வாழும் இந்து மத சமூகத்தினருக்கு சிறப்பான அடையாளம் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Lord Ram Statue Canada, Canada tallest Ram Idol, Ram Idol Canada, Hindu Heritage Centre Ram Statue, Tallest Ram statue in North America, 51 Feet Ram statue Mississauga