மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்கு எதிர்ப்பு: 52 பேரை அதிரடியாக கைது செய்த லண்டன் பொலிஸார்
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு 52 மன்னராட்சி எதிர்ப்பு போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்தனர்.
கூட்டத்தில் புகுந்த மன்னராட்சி எதிர்ப்பாளர்கள்
சனிக்கிழமையான நேற்று பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டிக் கொண்ட நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனை வரை கூடியிருந்தனர்.
சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற உடையணிந்து இருந்த அரச நடைமுறை ஆதரவாளர்களுக்கு மத்தியில், நூற்றுக்கணக்கான மஞ்சள் ஆடை அணிந்த மன்னராட்சி எதிர்ப்பாளர்களும் ஊர்வலப் பாதையில் இணைந்து கொண்டனர்.
AP
மேலும் அவர்கள் கையில் “எங்கள் ராஜா இல்லை”(Not My King) என்ற பதாகைகளை ஏந்திக் கொண்டு, பெரிய ஸ்பீக்கர்களில் மன்னராட்சிக்கு எதிரான கோஷங்களை கூச்சலிட்டனர்.
57 பேர் வரை கைது
முடிசூட்டு விழாவில் மன்னராட்சி எதிர்ப்பாளர்கள் இடையூறுகளை ஏற்படுத்தலாம் என பொலிஸார் உறுதியாக நம்பிய நிலையில் அதன் தலைவர் கிரஹாம் ஸ்மித்-தை ஊர்வலம் தொடங்கும் முன்பே தடுத்து வைத்தனர்.
அத்துடன், மேலும் மன்னராட்சிக்கு எதிரான 51 ஆர்ப்பாட்டக்காரர்களை கூட்டத்தில் இருந்து பிரித்து பொலிஸார் கைது செய்தனர்.
“NOT MY KING”…??? pic.twitter.com/33U1fgTrRF
— Pelham (@Resist_05) May 6, 2023
இது தொடர்பாக லண்டன் பெருநகர காவல்துறையின் தளபதி கரேன் ஃபிண்ட்லே வெளியிட்ட அறிக்கையில், "இன்று காலை நாங்கள் கைது செய்ததைத் தொடர்ந்து பொதுமக்களின் கவலையை நாங்கள் முற்றிலும் புரிந்து கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
Getty