ஆப்பிரிக்க நாடொன்றில் பரவும் மர்ம நோய்! 53 பேர் உயிரிழப்பு
காங்கோ நாட்டில் பரவி வரும் மர்ம நோய்க்கு 53 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சமீப காலமாக மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. அந்நாட்டின் வடமேற்கு பிராந்தியமான போலோகோ நகரில், கடந்த மாதம் 21ஆம் திகதி இந்நோயின் பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்ததுள்ளது.
இதுவரை இந்த காய்ச்சலுக்கு 420 பேர் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களில் 53 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நோயின் அறிகுறிகள் தோன்றிய 48 மணிநேரத்திற்குள் கணிசமான அளவு இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
WHOயின் ஆப்பிரிக்க அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி முதல் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தசை வலி மற்றும் சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் குறைந்தது 431 வழக்குகள் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |