ஐ.நா.வின் ‘list of shame-ல்’ பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட 56 நாடுகள் சேர்ப்பு! ஏதற்காக?
சர்வதேச சட்டங்களை பின்பற்ற தவறியதால் பிரித்தானியா, அமெரிக்க, பிரான்ஸ், ஸ்வீடன் உட்பட 56 நாடுகள் ஐ.நா.வின் ‘list of shame-ல்’ சேர்க்கப்பட்டுள்ளன.
சிரியா முகாம்களில் சிக்கி தவிக்கும் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் என தங்கள் குடிமக்களை, நாட்டிற்கு அழைத்து வர தவறியதற்காக 56 நாடுகள் ‘list of shame-ல்’ சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த 56 நாடுகளும், வடக்கு சிரியா முகாம்களில் உள்ள தங்கள் குடிமக்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஐ.நா.வின் சிறப்பு அதிகாரியான Fionnuala Ni Aolain கூறியதாவது, இந்த பட்டியலில் இருந்து உடனே வெளியேற நாடுகள் விரைவாக தங்கள் பணிகளை தொடங்க வேண்டும்.
சிரியாவில் உள்ள முகாம்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தால், சர்வதேச சட்டத்தின் கீழ் நாடுகள் தங்களது கடமைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதாகும்.
அவர்களின் கடமையை நிறைவேற்ற போதிய வாய்ப்புள்ளது. பெரியவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டியிருந்தால், அதற்கான வாய்ப்பு உள்ளது.
குழந்தைகளை பாதிக்கப்பட்டவர்களாகக் கருத வேண்டும், அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைந்து சமூகத்தில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
சிரியா முகாம்களை அமெரிக்க இராணுவ சிறையுடன் ஒப்பிட்ட Fionnuala Ni Aolain, பெண்கள் மற்றும் குழந்தைகள், கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற நிலைமைகளில் வாழ்ந்து கொண்டிருப்பதாக வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
வடக்கு சரியாவில் உள்ள Al Hol மற்றும் Roj முகாம்களில் ஐ.எஸ்-வுடன் தொடர்புடைய மொத்தம் 64,000 பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதாக Fionnuala Ni Aolain குறிப்பிட்டுள்ளார்.