பேரழிவால் அதிர்ந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு ஹைதி தீவை உலுக்கிய மற்றொரு சக்தி வாய்ந்த பூகம்பம்!
கரீபியன் நாடான ஹைதி தீவை 7.2 ரிக்டர் அளவிலான பூகம்பம் உலுக்கிய சில மணிநேரத்தில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக சனிக்கிழமை, ஹைதி தீவில் 7.2 ரிக்டர் அளவிலான பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில், குறைந்தது 304 பேர் பலியாகினார், 1800 பேர் காயமடைந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை.
மேலும், பூகம்பத்தால் பல கட்டிடங்கள் சரிந்ததால் நாட்டின் உள்கட்டமைப்பை சிதைந்துள்ளது.
7.2 பூகம்பத்தை தொடர்ந்து சனிக்கிழமை பிற்பகுதியில் ஹைதி தீவை 5.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் உலுக்கியது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
40 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக என்று EMSC குறிப்பிட்டுள்ளது, மேலும் லெஸ் கெய்ஸின் வடமேற்கில் 38 கிமீ தொலைவில் நடுக்கம் உணரப்பட்டது என தெரிவித்துள்ளது.
உடனடியாக உயிர் சேதம் அல்லது சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
சனிக்கிழமை ஹதியில் ஏற்பட்ட பேரழிவால் வருத்தமடைவதாக கூறிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அந்நாட்டிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார், மேலும் உடனடி அமெரிக்க உதவியளிக்க ஒப்புதல் அளித்தார்.