சர்வதேச சந்தையில் நிலவும் கடும் போட்டி: இந்தியாவில் 10,000க்கும் கீழ் குறையும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விலை
இந்தாண்டின் இறுதிக்குள் 5ஜி தொழில்நுட்ப வசதியை உள்ளடக்கிய மொபைல் போன்களில் விலை 10,000க்கும் கீழே குறைய வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
10,000க்கும் கீழ் குறையும் 5ஜி போன்கள்
இந்தியா முழுவதும் ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் அதற்கு இரண்டு மடங்கு வேகத்தில் இந்தியாவின் தொழில்நுட்ப வசதியும் வேகமெடுத்து வளர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டுகளில் 4ஜி போன்களின் விற்பனை இந்தியாவில் அதிகமாக இருந்து வந்த நிலையில், 5ஜி தொழில்நுட்பம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 5ஜி போன்களின் விற்பனை அளவும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
SMARTPRIX
அதே நேரத்தில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான மின்னணு சிப்-களை தயாரிக்கும் அமெரிக்க குவால்காம் நிறுவனத்திற்கும், தைவான் மீடியா டெக் நிறுவனத்திற்கும் இடையே சர்வதேச சந்தையில் கடுமையான தொழில் போட்டி அதிகரித்துள்ளது.
இதனால் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப வசதியை உள்ளடக்கிய ஸ்மார்ட்போன்களின் விலை 10,00க்கும் கீழ் குறைய அதிக வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகரிக்கும் டேட்டா நுகர்வு
இந்நிலையில் இந்தியாவில் இணைய சேவையை பயன்படுத்தும் பயனர்கள் மத்தியில் டேட்டா நுகர்வு அதிகரித்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
BWTHBLOG
ஜியோ நிறுவன வாடிக்கையாளர்களிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் 22.2 GB ஆக இருந்த டேட்டா நுகர்வு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 23.1GB ஆக உயர்ந்துள்ளது.
அதைப்போல ஏர்டெல் பயனர்களிடம் 20.75GB ஆக இருந்த மாதாந்திர டேட்டா நுகர்வு 21.3GB ஆக அதிகரித்துள்ளது.