இந்தியாவில் உச்சம் தொட இருக்கும் 5G: நபர் ஒருவர் மாதத்துக்கு 62 ஜிபி டேட்டா பயன்படுத்த வாய்ப்பு
இந்திய இன்டர்நெட் யூஸர்கள் வரும் 5 ஆண்டுகளில் மாதம் ஒன்றுக்கு சுமார் 62ஜிபி டேட்டாகளை பயன்படுத்தும் பயனர்களாக மாறுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 62 ஜிபி டேட்டா
சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்சன் வரும் 2028ம் ஆண்டுக்குள் அதாவது இன்னும் 5 ஆண்டுகளுக்குள் இந்திய யூஸர்கள் ஒரு மாதத்திற்கு சுமார் 62 ஜிபி என்ற அளவிலான இன்டர்நெட் டேட்டாக்களை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஆய்வு தரவுகளை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் டேட்டா பயன்பாட்டில் 5 ஆண்டுகளில் இந்தியா முதலிடம் பிடிக்க கூட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஸ்மார்ட்போன் யூஸர்களின் சராசரி இன்டர்நெட் டேட்டா டிராபிக் 2022ல் 26ஜிபி இருக்கும் நிலையில் அது ஆண்டுக்கு 16% CAGR வளர்ச்சியடையும், இந்த வளர்ச்சி விகிதத்தின் மூலம் 2028ம் ஆண்டில் யூஸர்களின் மாத இன்டர்நெட் டேட்டா பயன்பாடு 682GB-யாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் 5ஜி யூஸர்களின் எண்ணிக்கை
இந்திய பயனர்கள் இடையே ஸ்மார்ட்போன் யூஸர்களின் எண்ணிக்கை கடந்த 2022ம் ஆண்டு 76 சதவீதமாக உள்ள நிலையில் இவை 2028ம் ஆண்டு 93 சதவீதமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் இந்தியாவில் 5ஜி யூஸர்களின் பயன்பாடும் அசூர வேகத்தில் வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 10 மில்லியன் 5ஜி யூஸர்கள் எண்ணிக்கையில் இருந்து 2028ம் ஆண்டுக்குள் அவை 700 மில்லியனை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் 5ஜி சேவையை அதிக அளவு பயன்படுத்தும் நாடாக இந்தியா உருவெடுக்கும். சீனா கிட்டத்தட்ட 1,310 மில்லியன் டேட்டாக்களை பயன்படுத்தும் யூஸர்கள் கொண்ட நாடாக 2028ல் உருவெடுத்து தன்னுடைய முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் 5ஜி-யின் வளர்ச்சியால் 2022ல் 820 மில்லியனாக இருக்கும் 4ஜி யூசர்களின் மதிப்பு 2028ல் 500 மில்லியன் ஆக குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |