பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸ் தீவொன்றை சற்று முன் நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்
இன்று மாலை, பிலிப்பைன்ஸ் தீவுகளில் ஒன்றான Mindanao தீவை, உள்ளூர் நேரப்படி மாலை 5.18 மணியளவில், ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது (சில ஊடகங்கள் 6.6 என குறிப்பிட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை, அதாவது, ஜூன் மாதம் 8ஆம் திகதியும் இதே தீவை ஒரு நிலநடுக்கம் தாக்கியது. அது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது.
அதைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான், தைவான், பப்புவா நியூகினியா, Palau, Yap மற்றும் அமெரிக்காவின் மேற்கு கரைப்பகுதிக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த நிலநடுக்கத்தின்போது சுமார் 65 பேர் உயிரிழந்ததுடன் 200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், ஜூன் 8 அன்று உருவான நிலநடுக்கத்துக்கும், இன்று உருவான நிலநடுக்கத்துக்கும் தொடர்பில்லை என துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஏனென்றால், இரண்டு நிலநடுக்கங்களின் மையங்களும் 250 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் அமைந்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |