6 காதலிகள், 2 மனைவிகள், 9 குழந்தைகள்.., ஆடம்பரமாக வாழ்வதற்கு திருட்டை மூலதனமாக்கிய பிரபலம்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த அஜீத் மயூராவை திருட்டு வழக்குகளில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரால் கைது
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அஜீத் மயூரா. இவர் சோசியல் மீடியாவில் பிரபலமானவர். இவரும், இவரது ஆதரவாளர்களும் தர்மேந்திரா என்பவரிடம் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி ரூ.3 லட்சத்தை ஏமாற்றியுள்ளனர்.
இதனால் தர்மேந்திரா அளித்த புகாரின்படி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மயூராவை கைது செய்தனர். அப்போது, மயூராவிடம் நடத்திய விசாரணையின் போது, அவர் மீது 9 கிரிமினல் வழக்கு இருப்பது தெரிய வந்தது.
மயூராவின் வாழ்க்கை
ஆரம்பத்தில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்த மயூராவுக்கு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 குழந்தைகள் உள்ளனர். மும்பையில் மயூராவுக்கு வேலை பறிபோனதால் போலி பிளாஸ்டர் ஆப் பாரீஸ் தயாரித்தார்.
ஆனால், அதில் சரியாக பணம் கிடைக்காததால் சொந்த ஊரான உத்தர பிரேதேசத்திற்கு சென்றார். அங்கும், இவருக்கு சரியான ஊதியம் இல்லாததால் 2016 -ம் ஆண்டு முதன்முறையாக திருட ஆரம்பித்தார். அப்படியே, போலி நிறுவனங்கள், கள்ள நோட்டு , திருட்டு என அனைத்தையும் செய்தார்.
அப்போது தான் மயூராவுக்கு சுசிலா(30) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்து, போலி நிறுவனங்கள், கள்ள நோட்டு மாற்றுதல் போன்ற செயல்களை இருவரும் இணைந்து செய்தனர். பின்னர், சசிகலாவுடன் மயூரவாவுக்கு திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளனர்.
Representative image
இதனால், மயூரா தனது இரண்டு மனைவிகளுக்கும் தனித்தனியே வீடுகள் வாங்கி கொடுத்து தங்கவைத்துள்ளார். இப்படி ஆடம்பரமாக வாழ நினைத்த மயூரா திருட்டில் சம்பாதிக்கின்ற பணத்தை இரு மனைவிகளுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், மயூராவின் செல்போனை வாங்கி பொலிஸார் ஆய்வு செய்த போது, அவருக்கு 6 காதலிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த 6 பெண்களுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். மேலும், இவர் சோஷியல் மீடியாவில் பகிரும் வீடியோக்கள் அனைத்தும் பெண்களை கவரும் வகையிலேயே உள்ளன.
இந்நிலையில் தான், லக்னோவில் உள்ள ஹொட்டலில் தனது காதலியுடன் மயூரா இருந்தபோது பொலிஸார் அவரை கைது செய்தனர். மேலும், அவருக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |