இரவோடு இரவாக இஸ்ரேல் நடத்திய வேட்டை: 6 பிணைக் கைதிகள் உடல்கள் மீட்பு
6 பிணைக் கைதிகளின் உடல்கள் காசாவில் இருந்து மீட்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட உடல்கள்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் மற்றும் பிணைக்கைதிகள் மீட்பை நடத்தி வருகிறது.
இந்நிலையில் காசாவில் இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 6 பிணைக் கைதிகள் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த அழைப்பு
இந்த நடவடிக்கையானது, இஸ்ரேலின் சம்மதத்திற்கு பிறகு காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான "பிரிட்ஜிங்" முன்மொழிவுக்கு ஹமாஸ் அமைப்பு உடன்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து நடந்துள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சந்திப்பு பிறகு பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், "பிரிட்ஜிங்" முன்மொழிவுக்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், இது போர் நிறுத்தம் மற்றும் பிணை கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றிக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |