ரஷ்யாவின் பதிலடி அச்சுறுத்தல்கள் முட்டாள்தனமானவை! உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
ரஷ்யாவின் பதிலடி அச்சுறுத்தல்கள் முட்டாள்தனமானவை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் கட்டுப்பாட்டில் ரஷ்ய குடியேற்றங்கள்
உக்ரைன் படைகள் தற்போது சர்வதேச எல்லைப் பகுதியை தாண்டி ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 90 குடியேற்ற பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து இருப்பதாக உக்ரைனிய ராணுவ படை அறிவித்துள்ளது.
உக்ரைனிய ஜனாதிபதி வழங்கிய தகவலில், ரஷ்யாவிற்குள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட எதிர்பாராத ஊடுருவல் தாக்குதலில் உக்ரைனிய படைகள் 1,250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.
ரஷ்யாவின் இராணுவத்தை பலவீனப்படுத்தி இடையக மண்டலம் ஒன்றை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது குறிப்பிடத்தக்க கருத்தியல் மாற்றங்களை பார்க்க முடிகிறது. போரை மதிப்பிடும் சில கூட்டாளிகளால் ரஷ்யாவின் சிவப்பு கோடு என்று அழைக்கப்படும் மாயை கருத்து தற்போது உடைக்கப்பட்டுள்ளது. என திங்களன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள Pokrovsk நகரில் உள்ள குடும்பங்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்ய படைகள் Pokrovsk நகரில் கடந்த சில நாட்களாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |