அமெரிக்காவில் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழப்பு (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே இன்று குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்துள்ளது. இதில், 6பேர் உயிரிழந்துள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஈக்வடோரில் சிம்போரஸோ மாகாணத்தின் அலாவ்சி நகரில் நேற்று ஏற்பட்ட மண்சரிவினால் குறைந்தபட்சம் 7 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 50 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
பிரான்ஸின் எரிபொருள் உதவிக்காக விண்ணப்பிக்க 31ஆம் திகதி வரையே காலக்கெடு வழங்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் 9 பேர் புதைமணலில் இருந்து மீட்கப்பட்டனர்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.