வன்முறையில் பாதுகாப்பு வீரர்கள் 6 பேர் உயிரிழப்பு! கண்டதும் சுட உத்தரவு..பாகிஸ்தானில் பதற்றம்
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஈடுபட்ட போராட்டத்தில் 6 பாதுகாப்பு வீரர்கள் பலியாகினர்.
தொடர்ந்து சிறையில்
ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல வழக்குகளில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரானுக்கு, தோஷகானா ஊழல் வழக்கில் பிணை வழங்கப்பட்டாலும், மற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளதால் அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
இதன் காரணமாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்லாமாபாத் நகரை பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி ராணுவ வீரர்கள், பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் செல்போன், இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.
வெடித்த வன்முறை
இந்நிலையில், ஆதரவாளர்கள் கூடிய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் துணை ராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் என 6 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
இதனையடுத்து வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களை கண்டதும் சுட, அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |