ரஷ்யாவுக்குள் புகுந்த உக்ரைனிய ட்ரோன்கள்: கெர்சன் மீதான ஷெல் தாக்குதலில் 6 வயது குழந்தை பலி
ரஷ்யாவின் பிரையன்ஸ்க் மற்றும் யெவ்படோரியா பகுதியில் தாக்குதலுக்காக நுழைந்த உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முறியடிக்கப்பட்ட ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் தாக்குதல் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கி 19 வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த போர் நடவடிக்கையில் இருநாடுகளும் மாறி மாறி வான் தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் ரஷ்யாவின் பிரையன்ஸ்க்(Bryansk) பிராந்தியத்தில் தாக்குதல் நடத்த நுழைந்த 6 உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் யெவ்படோரியா(Yevpatoria) பகுதியில் தாக்குதலுக்காக நுழைந்த 11 உக்ரைனிய ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா தாக்குதல்
இந்நிலையில் உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ரஷ்யா பயங்கர ஷெல் தாக்குதல் நடத்தியது.
ரஷ்யாவின் இந்த ஷெல் தாக்குதலில் 6 வயது குழந்தை உயிரிழந்து இருப்பதுடன் அவருடைய சகோதரரும் இதில் பலத்த காயமடைந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |