பள்ளிப் பேருந்தில் 6 வயது மாணவிக்கு வன்கொடுமை! அதிர்ச்சி சம்பவம்
டெல்லியில் பள்ளிப்பேருந்தில் 6 வயது மாணவி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பேகம்பூர் பகுதியில் உள்ள ரோகினியில் 6 வயது மாணவி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தாய் பொலிசில் புகார் அளித்துள்ளார், உடனடியாக வழக்குபதிவு செய்துள்ள பொலிசார் சம்பந்தப்பட்ட மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தெரிந்து கொண்ட பள்ளி நிர்வாகம் புகாரை வாபஸ் பெறக்கூறியதுடன் மாணவியின் அடையாளத்தை பொதுவெளியில் கூறியதாக தெரிகிறது.
இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
*6 year old girl sexually assaulted in a school bus, DCW issues notice*
— Delhi Commission for Women - DCW (@DCWDelhi) September 2, 2023
The Delhi Commission for Women Chairperson @SwatiJaiHind has issued notice to Delhi Police in the matter of sexual assault with a 6 year old girl in private school bus. pic.twitter.com/mtx1uuRwqO