FlyDubai விமான பேரழிவு தவிர்க்கப்பட்ட விவகாரம்: 6 வயது சிறுமியின் பங்கு

Israel Saudi Arabia Flight
By Balamanuvelan Oct 02, 2026 01:15 PM GMT
Report

6 year old girl played vital role in stopping FlyDubai disaster: FlyDubai விமான பேரழிவு தவிர்க்கப்பட்ட விவகாரத்தில் 6 வயது சிறுமி ஒருத்தி முக்கிய பங்கு வகித்துள்ளாள்.

விமானி ஒருவர், துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்ட Flydubai நிறுவன விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, விமானத்தை தரையில் மோத முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

அந்த சம்பவத்தை, அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் முதலான கட்டிடங்கள் மீது விமானம் மோதிய, 9/11 பேரழிவுடன் ஒப்பிடுகின்றன ஊடகங்கள்!

தவிர்க்கப்பட்ட பேரழிவு

புதன்கிழமையன்று, துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்று, புறப்பட்டு ஒன்றரை மணி நேரம் ஆன நிலையில், திடீரென 33,000 அடி உயரத்திலிருந்து 17,000 அடிக்கு சரிந்துள்ளது.

FlyDubai விமான பேரழிவு தவிர்க்கப்பட்ட விவகாரம்: 6 வயது சிறுமியின் பங்கு | 6 Year Old Girl Role In Stopping Flydubai Disaster

நடந்தது என்னவென்றால், விமானத்தின் விமானியான ஸ்மித்தை (Captain Smit Machchhar), அவரது சக விமானி ஒருவர் திடீரென தாக்கத் துவங்கியுள்ளார்.

அவர் ஸ்மித்தை சரமாரியாக தாக்கியதுடன், கூர்மையான ஆயுதம் ஒன்றாலும் தாக்கியுள்ளார். முதலில் அவர் பயன்படுத்தியது ஒரு கத்தி என கூறப்பட்ட நிலையில், பின்னர், அவசர காலத்தில் கதவு முதலானவற்றை திறப்பதற்காக பயன்படுத்தப்படும் கோடரி (cockpit crash axe) என தகவல் வெளியாகியுள்ளது. 

காதலிப்பதாக ஏமாற்றி பண மோசடி செய்த நபரைத் தேடி இந்தியா வந்த வெளிநாட்டுப்பெண்

காதலிப்பதாக ஏமாற்றி பண மோசடி செய்த நபரைத் தேடி இந்தியா வந்த வெளிநாட்டுப்பெண்

காயமடைந்த நிலையிலும், விமானிகளின் அறையின் (cockpit) கதவைத் திறந்த ஸ்மித் சத்தமிட, பயணிகள் சிலர் சென்று தாக்குதல்தாரியைக் கட்டுப்படுத்தி, அவரைக் கட்டிப்போட்டுள்ளார்கள். 

FlyDubai விமான பேரழிவு தவிர்க்கப்பட்ட விவகாரம்: 6 வயது சிறுமியின் பங்கு | 6 Year Old Girl Role In Stopping Flydubai Disaster

பல் மருத்துவர் ஒருவர் ஸ்மித்துக்கு முதலுதவி செய்து, இரத்தம் வழிவதைக் கட்டுப்படுத்தியுள்ளார்.

மற்றொரு நபர் விமானத்தை அவசரமாக சவுதியிலுள்ள Tabuk விமான நிலையத்தில் இறக்க உதவியுள்ளார்.

தாக்குதல்தாரி ஓமான் நாட்டவர் என்று மட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அவரைக் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை.

சவுதி அதிகாரிகள் அவரைக் கைது செய்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். அவர் அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

6 வயது சிறுமியின் பங்கு

இந்நிலையில், விமானம் தரையில் மோதி ஏற்படவிருந்த பேரழிவைத் தவிர்த்ததில் 6 வயது சிறுமி ஒருத்தி, மற்றும் அவளது தாயின் பங்கு குறித்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

Nina Manes என்னும் அந்த ஆறு வயது சிறுமி, கழிவறைக்குச் சென்றிருந்த நேரத்தில்தான், விமானிகள் அறையில் குழப்பம் உருவாகியுள்ளது. 

FlyDubai விமான பேரழிவு தவிர்க்கப்பட்ட விவகாரம்: 6 வயது சிறுமியின் பங்கு | 6 Year Old Girl Role In Stopping Flydubai Disaster

விமானிகள் அறையின் அருகிலிருந்த கழிவறைக்கு Ninaவுடன் அவரது தாயும் சென்றிருந்த நிலையில், விமானிகள் அறையில் சண்டையிடும் சத்தம் கேட்பதையும் யாரோ அலறுவதையும் கேட்டிருக்கிறாள்.

உடனே வெளியே ஓடி வந்த Nina, தன் தாயிடம் அதைக் கூற, அப்போதுதான் விமானி ஸ்மித் கதவைத் திறந்துகொண்டு கீழே விழுந்திருக்கிறார்.  

உடனே Ninaவின் தாயான Tali உதவி கோரி சத்தமிட, விமானப் பணியாளர்களும், பயணிகளும் அவருக்கு உதவ விரைந்துள்ளார்கள்.

இதற்கிடையில், தன் மகள்கள் அலறுவதைக் கேட்ட Ninaவின் தந்தையான Tzika, உதவுவதற்காக விமானிகளின் அறைக்குள் ஓடியுள்ளார்.

ஆக மொத்தத்தில், அந்த விமானம் தரையில் மோதி ஏற்பட இருந்த பெரும் சேதத்தை தவிர்த்ததில் Ninaவின் குடும்பமும் பங்காற்றியுள்ளது.

காயம் பட்ட நிலையிலும் சமயோகிதமாக செயல்பட்ட விமானி ஸ்மித், அவருக்கு உதவிய பல் மருத்துவர், விமானத்தை தரையிறக்க உதவிய யாரோ ஒரு நபர், Ninaவின் குடும்பம் என பல ஹீரோக்கள் இணைந்து, 174 பயணிகள், 6 விமானப்பணியாளர்கள், பணியில் இல்லாத இரண்டு விமானிகள் என 180க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றிவிட்டார்கள்! 

மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US