இருட்டு அறையில்.. பூனைகளுடன் அடைத்து வைக்கப்ட்ட 6 வயது குழந்தை! நெஞ்சை உருக்கும் கொடூர சம்பவம்
ரஷியாவில் 6 வயது பெண் குழந்தையை பூனைகளுடன் கட்டி வைத்து சித்ரவதை செய்த கொடூர தாயை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடைபெற்று வருகின்றது.இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களே பெற்ற குழந்தையை ஈவு இரக்கமில்லாமல் கொடுமை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்யா பெண் ஒருவர் தனது 6 வயது குழந்தைக்கு பல நாட்களாக செய்யப்பட்ட கொடூர செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் தாய் தனது 6 வயது பெண் குழந்தையை ஒரு இருட்டு அறையில் 19 பூனைகளுடன் கட்டி வைத்து கண்மூடித்தனமாக அடித்து சித்ரவதை செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் குழந்தைக்கு சரியான உணவு கொடுக்காமல் பூனைக்கு வழங்கும் உணவுகளை தந்து கொடுமை படுத்தியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழந்தையை மீட்டு அந்த கொடூர தாயை கைது செய்துள்ளனர்.
மேலும் விசாரணையில், 3 வயதுக்கு பின் குழந்தையின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகத்தான் இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் தந்துள்ளார். பிஞ்சு குந்தையை பல நாட்களாக பட்டினி போட்டு அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.