தேர்தல்களால் சாதனை படைக்கவிருக்கும் ஆண்டு: மொத்தம் எத்தனை நாடுகள் தெரியுமா?
சாதனை எண்ணிக்கையில் தேர்தல்கள் மிகுந்த ஆண்டாக 2024 மாறியுள்ளதாகவும், ஒரே ஆண்டில் 60 நாடுகள் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம்
ரஷ்யாவில் விளாடிமிர் புடின் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்கிறார். மிக விரைவில் இந்தியாவிலும், எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த 60 நாடுகளில் முன்னெடுக்கப்படும் தேர்தல்களால் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொதுவாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் 60வது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலானது எதிர்வரும் நவம்பர் மாதம் 5ம் திகதி முன்னெடுக்கப்பட உள்ளது.
பதிவு செய்துள்ள 160 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். அடுத்த 4 ஆண்டுகளுக்கு வெள்ளைமாளிகையில் இருந்து யார் ஆட்சி செய்வார்கள் என்பதில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இரண்டு ஜனாதிபதிகள் எதிரும் புதிருமாக ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வது 1956க்கு பின்னர் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. வெளியான கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், இரு ஜனாதிபதிகளுக்கும் மக்கள் மத்தியில் போதிய செல்வாக்கு இல்லை என்றே தெரிய வந்துள்ளது.
அடுத்ததாக மிக விரைவில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது இந்தியா. 2024 ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நடைபெறும். மொத்தமுள்ள 1.4 பில்லியன் மக்கள் தொகையில் 900 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க உள்ளனர்.
தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியே மக்களால் மீண்டும் தெரிவு செய்யப்படுவார் என அவர் நம்புகிறார். மார்ச் 15 முதல் மூன்று நாட்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் முன்னெடுக்கப்படுகிறது.
நால்வர் தேர்தலில் போட்டி
இதில் வெற்றிபெறும் நபர் மே மாதம் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்பார். 112 மில்லியன் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் வெளிநாட்டில் வாழும் 1.9 மில்லியன் மக்களும் வாக்களிக்க உள்ளனர்.
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உட்பட நால்வர் தேர்தலில் போட்டி இடுகின்றனர். இருப்பினும், விளாடிமிர் புடினே மீண்டும் வெற்றி பெறுவார் என கூறுகின்றனர்.
எதிர்வரும் ஜூலை மாதத்தில் சிரியாவில் தேர்தல் முன்னெடுக்கப்பட உள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியில் சிறிய மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் மற்றும் ஈரானில் ஏற்கனவே தேர்தல் முடிவுக்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |