ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த கம்சட்கா எரிமலை: நிலநடுக்கம் காரணமா?
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள Krasheninnikov எரிமலை, 600 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெடித்துள்ளது.
கடந்த வாரம் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்துடன் இந்த எரிமலை வெடிப்பு தொடர்புடையதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Russia's RIA செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், Kamchatka Volcanic Eruption Response Team தலைவர் ஒல்கா கிரினா, “இது வரலாற்றில் பதிவான Krasheninnikov எரிமலையின் முதல் வெடிப்பாகும்” என்று கூறியுள்ளார்.
இந்த எரிமலையின் கடந்த வெடிப்பு 1463-ஆம் ஆண்டில் (40 ஆண்டுகள் முன்/பின் வேறுபாடு இருக்கலாம்) நடந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பொலினீசியா, சிலி போன்ற இடங்களில் சுனாமி எச்சரிக்கைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து Kamchatka-வில் உள்ள Kluychevskoy எரிமலையும் வெடித்தது.
ரஷ்யாவின் அவசர சேவைகள் அமைச்சகம் கூறுகையில், 6000 மீட்டர் உயரம் வரை சாம்பல் மேகம் உயர்ந்துள்ளது. சாம்பல் மேகம் பசிபிக் கடலுக்கு நோக்கி நகர்ந்து வருவதால், மனித வசிப்பிடங்களுக்கு உடனடி அபாயம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த எரிமலை வெடிப்பிற்கு Orange aviation alert அளிக்கப்பட்டுள்ளது, இது விமான போக்குவரத்துக்கு அபாய அளவைக் குறிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Krasheninnikov volcano eruption, Kamchatka volcano 2025 news, Russia earthquake volcano link, 600 years dormant volcano erupts, Kamchatka natural disaster, volcano causes tsunami alert, orange aviation alert Russia, Klyuchevskoy volcano eruption, Russia Pacific ash cloud, Kamchatka eruption latest news