போரிலிருந்து பின்வாங்கிய 66 வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த நாடு
66 soldiers sentenced to death in DR congo: போரில் கட்டளைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட 66 வீரர்களுக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
காங்கோ ஜனநாயகக் குடியரசின் ஆயுதப் படைகளைச் சேர்ந்த 66 வீரர்களுக்கு, போரில் கட்டளைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மோதல்கள்
காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் எல்லைகளுக்கு அருகில் கிளர்ச்சியாளர் குழுக்களுடன் ஆயுதப் படைகளின் தீவிர மோதல்கள் நடைபெற்று வருகிறது.
வடக்கு கிவு, தெற்கு கிவு மாகாணங்களில் நடைபெற்ற மோதல்களின்போது, தங்கள் பணியிடங்களைக் கைவிட்டு சென்றதாகவோ அல்லது அங்கிருந்து தப்பி ஓடியதாகவோ 71 வீரர்கள் குற்றம்சாட்டப்பட்டனர்.
மரண தண்டனை
அதனைத் தொடர்ந்து கோழைத்தனம், கலகம் மற்றும் கட்டளைகளை மீறியதாக அந்த 71 வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் 66 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட, ஏனைய 4 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
