உக்ரேனியர் மீது தாக்குதல்..ரஷ்யர்கள் ஆர்மீனியாவில் கைது
Russian soldiers detained in armenia: உக்ரேனிய நபர் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
உக்ரேனியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், ஆர்மீனியாவில் ரஷ்ய வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
உக்ரேனியர் மீது தாக்குதல்
ரஷ்யாவின் 102-வது இராணுவத்தளம் அமைந்துள்ள Gyumri நகரில் சுமார் ஒரு மாதத்திற்கு உக்ரேனியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Dmytro Samuelenko என்று அடையாளம் காணப்பட்ட அந்நபர், ரஷ்ய வீரர்கள் தன்னை தாக்கியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஆர்மீனிய புலனாய்வாளர்கள் குற்றவியல் விசாரணையைத் தொடங்கினர். மேலும் மருத்துவ தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு ரஷ்ய வீரர்களை ஆர்மீனிய சட்ட அமலாக்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக RFE/RL-யின் ஆர்மீனிய சேவை திங்கள்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், யெரெவனில் உள்ள ரஷ்ய தூதரகமோ அல்லது 102-வது இராணுவத் தளமோ, கைது செய்யப்பட்ட இரண்டு வீரர்கள் குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
மாறுபட்ட நடவடிக்கை
அதே சமயம், இந்த கைது நடவடிக்கை பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வந்த சட்ட நடைமுறையில் இருந்து மாறுபட்ட ஒன்றாகும்.
முன்னதாக, கியூம்ரியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் ரஷ்ய இராணுவத்தினர், ரஷ்ய இராணுவத் தளத்திலேயே கைது செய்யப்படுவது வழக்கமாக இருந்தது.
இதற்கிடையில், ஆர்மீனியாவில் ரஷ்ய வீரர்கள் சம்பந்தப்பட்ட மற்றொரு தாக்குதல் சம்பவம் குறித்தும், சமீபத்தில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதாக RFE/RL செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
