ஜப்பானை தாக்கிய நிலநடுக்கம்: சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை
ஜப்பானை நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ள நிலையில், தொடர்ந்து நிலநடுக்கங்களும் நிலச்சரிவுகளும் தாக்கக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
ஜப்பானை தாக்கிய நிலநடுக்கம்
இன்று உள்ளூர் நேரப்படி 4.53 மணியளவில், ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
[Tsunami 17:08 JST on 20 Apr 2026, A tsunami warning has been issued for Pacific Coast of Aomori Prefecture. Those in coastal or river areas, evacuate right now to high ground and safer areas.
— 内閣府防災 (@CAO_BOUSAI) April 20, 2026
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, Kuji என்னுமிடத்திலுள்ள துறைமுகம் ஒன்றை சிறிய அளவிலான, அதாவது, 80 சென்றிமீற்றர் உயரமுடைய சுனாமி ஒன்று தாக்கியுள்ளது.
இந்நிலையில், மேலும் பெரிய அளவில், அதாவது, 10 அடி உயரம் வரையுள்ள சுனாமி அலைகள் தாக்கலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
நிலநடுக்கம் குறித்து ஊடகவியலாளர்களிடையே பேசிய ஜப்பான் பிரதமரான Sanae Takichi, நிலநடுக்கத்தால் மனித மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், 12 நகரங்களில் வாழும் 128, 471 மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், கடற்கரைகளுக்குச் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |