மழைக்காக ரயிலுக்கு அடியில் அமர்ந்த தொழிலாளர்கள் 7 பேர் மரணம்: ஒடிசாவில் மீண்டும் ஒரு சோகம்
ஒடிசாவில் உள்ள ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் எறியதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 1 பேர் காயமடைந்தனர்.
ஒடிசாவில் உள்ள ஜாஜ்பூர்-கியோஞ்சர் சாலை ரயில் நிலையத்தில் புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இறந்த 7 பேரும் மழையில் நனையாமல் இருக்க ரயிலுக்கு அடியில் தஞ்சம் புகுந்த தொழிலாளர்கள்.
அவர்கள் கீழே இருப்பது தெரியாமல் ரயில் திடீரென முன்னோக்கி நகர்ந்தது. பின்னர் அவர்கள் வெளியேற முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் பலத்த காயமடைந்ததாகவும் ஜாஜ்பூர் மாவட்ட ஆட்சியர் கூறினார்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் மூன்று இறந்துவிட்டதாகவும் ஒருவர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் பின்னர் தெரிவித்தார்.
உயிரிழந்த 7 பேரும் ரயில் பாதையில் பணிபுரியும் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Days after the horrific train tragedy in Odisha that stunned the entire world, rakes of a goods train ran over eight labourers, near Jajpur-Keonjhar Road station in the state on Wednesday.
— Ahmed Khabeer احمد خبیر (@AhmedKhabeer_) June 7, 2023
pic.twitter.com/PeW8Lo1Tyb
6 killed in yet another train accident from #Odisha's #Jajpur. Labourers seeking cover from heavy thunderstorms were run over by a goods train. pic.twitter.com/IVnJOyYBHy
— Sudhanidhi Bandyopadhyay (@SudhanidhiB) June 7, 2023
சில நாட்களுக்கு முன்பு, ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Odisha, Odisha Train Accident,