கடற்கரையில் ஒதுங்கிய பைகளில் கட்டுக்கட்டாக பணம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம்
சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற தீவொன்றில், கடற்கரையில் ஒதுங்கிய பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு உருவானது.
கரையில் ஒதுங்கிய பைகளில் கட்டுக்கட்டாக பணம்
இத்தாலிக்கு சொந்தமான சிசிலித் தீவிலுள்ள, Casuzze என்னும் இடத்தில் அமைந்துள்ள கடற்கரை ஒன்றில் பல பைகள் கரையொதுங்கியுள்ளன.

அதைக் கண்ட மக்கள் அந்த பைகளை சேகரித்து அதில் என்ன உள்ளது என சோதிக்க, அந்தப் பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது.
அதாவது, மால்ட்டா தீவிலிருந்து ஒரு படகு வந்துள்ளது. அதில் மூன்று ஆண்களும் ஒரு சிறுபையனும் இருந்துள்ளார்கள்.
வரும் வழியில் எரிபொருள் தீர்ந்துபோகவே, அந்த படகு அலைகளால் கரையை நோக்கி இழுத்துவரப்பட்டுள்ளது.

பொலிசார் அவர்களை நெருங்க, பொலிசாரைக் கண்டதும் படகிலிருந்தவர்களில் மூன்று பேர் கடலில் குதிக்க, ஒருவர் படகிலிருந்த பைகளை கடலுக்குள் வீசியுள்ளார். அந்த பைகள்தான் கரையில் ஒதுங்கியுள்ளன!
பொலிசார் அந்த பணத்தை பறிமுதல் செய்துள்ள நிலையில், அந்தப் பைகளில் சுமார் 500,000 முதல் 600,000 பவுண்டுகள் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
படகிலிருந்த நால்வரையும் பொலிசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ள நிலையில், அது சட்ட விரோதப் பணமா, அது யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |