சிகிச்சைக்கு 7 நிமிடங்கள் போதும்: பிரித்தானியாவில் புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு
பிரித்தானியாவில் ஊசி மூலம் செலுத்த கூடிய புற்றுநோய்க்கான புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழைய செயல்முறை
பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உரிய இரத்த நாளங்களை கண்டறிந்து அவற்றில் டிரிப் மூலமாக மருந்தினை செலுத்தி சிகிச்சை அளிக்கப்படும்.
இதற்கு குறைந்தது 1 மணி நேரம் வரை விரையமாகும், சில சமயங்களில் நோயாளிகளின் உரிய இரத்த நாளங்களை கண்டறிய தாமதமாகும் பட்சத்தில் சிகிச்சை நேரமானது இன்னும் அதிகரிக்கும்.
இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தங்களுடைய நாள் முழுவதையும் மருத்துவமனையிலேயே செலவழிக்க நேரிடும்.
புற்றுநோய்க்கு புதிய மருந்து
இந்நிலையில் பிரித்தானியாவில் தோலின் அடியில் ஊசி மூலம் செலுத்தக்கூடிய Atezolizumab என்ற புற்றுநோயிக்கான புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளது.
இந்த Atezolizumab மருந்தானது நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டிவிட்டு புற்றுநோய் பாதித்த செல்களைத் தாக்கி அழிக்கும்.
மேலும் இது நோயாளி மற்றும் மருத்துவர் என இருதரப்பு நேரத்தையும் வெகுவாக குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவர்களும் ஒரே நாளில் கூடுதலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
இந்த Atezolizumab மருந்து செலுத்தும் முறைக்கு அதிகபட்சமாக 7 நிமிடங்கள் வரை ஒதுக்கினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Atezolizumab என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஊசி மருந்தானது நுரையீரல், மார்பகம், கல்லீரல் மற்றும் கணையம் ஆகிய புற்றுநோய் பாதிப்புகளில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |