தமிழ்நாட்டில் புதிதாக உதயமாகும் 7 மாவட்டங்கள்.., எந்தெந்த ஊர் தெரியுமா?
தமிழகத்தில் புதியதாக 7 மாவட்டங்கள் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மாவட்டங்கள்
கடந்த 1956-ம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டபோது 13 மாவட்டங்கள் இருந்தன.
அதன்பின் தேவைக்கேற்ப மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு தற்போது 38 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.
அப்போது மக்கள் தொகை அதிகமாக இருக்கும் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் மாவட்டங்களையும் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதுகுறித்த பரிசீலனைகள் நடைபெற்ற நிலையில் தற்போது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதிதாக ஏழு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய மாவட்டங்கள் என்னென்ன?
தஞ்சை மாவட்டத்தில் இருந்து கும்பகோணம் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாகவும், கடலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு விருத்தாசலம் தனி மாவட்டமாகவும் அறிவிக்கப்பட உள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சியும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கோவில்பட்டியும், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பிரித்து பழநியையும் தனி மாவட்டமாகவும் அறிவிக்கப்பட உள்ளன.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆரணி, ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோபிச்செட்டிப்பாளையம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டங்களாக உருவாகவுள்ளன.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் தனி மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |