நெருங்கும் தாலிபான்கள் கொடுத்த காலக்கெடு! தப்பிக்க ஓடும் மக்கள்...பறிபோகும் உயிர்கள்: காபூலின் பரிதாப காட்சி
காபூல் விமானநிலையத்தின் கூட்ட நெரிசலில் மேலும் 7 பெண்கள் உயிரிழந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறுவதற்கு கடைசி நாள் ஆகஸ்ட் 31 என்பதால், காபூல் விமானநிலையத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய போது, அமெரிக்கா துருப்புகள் இங்கிருந்து வெளியேறுவதற்கு தாலிபான்கள் ஆக்ஸ்ட் 31-ஆம் திகதி வரை காலக்கெடு கொடுத்துள்ளனர்.
?| 7 #Afghans killed in chaos at #Kabul airport, #UK army says
— EHA News (@eha_news) August 22, 2021
▪️There have been stampedes and crushing injuries in the crowds over the past few days.
▪️A panicked crush of people trying to enter Kabul’s international airport killed seven Afghan civilians in the crowd. pic.twitter.com/lCf4RR9s7n
இதனால் அதற்குள் முடிந்தவரை அமெரிக்கா என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறது. இது குறித்த தகவல் அங்கிருக்கும் மக்களுக்கு தெரியவர, இன்னும் நாட்கள் குறைவாக இருப்பதால், முன்பு இருந்ததை விட இப்போது காபூல் விமானநிலையத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.
இதன் காரணமாக அங்கு நிலைமை மிகவும் குழப்பமானதாகவும், ஆபத்தானதாகவும் மாறி வருகிறது. மக்களன் கூட்டம் அலை மோதுவதால், அங்கு கூட்ட நெரிசல் நேற்று 3 பேர் சிக்கி உயிரிழந்ததாக செய்தி வெளியான நிலையில், தற்போது மேலும் 7 பெண்கள் இந்த கூட்ட நெரிசலில் நசுங்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
WARNING: GRAPHIC CONTENT- Today's situation at #kabulairport is the most horrible possible. Witnesses say dozen were trampled to death in five minutes by US Army. The transfer of the bodies of the trampled people can be seen in the video.#Afghanistan pic.twitter.com/Ag5bw3kbCg
— Afghanistan Updates (@afghanupdates1) August 22, 2021
தாலிபான்கள் கொடுத்த காலக்கெடுவிற்குள் அமெரிக்கா தன் குடிமக்களை வெளியேற்ற முடியுமா? அப்படி தாண்டி சென்றால் இதற்கு தாலிபான்கள் அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை.
இதற்கிடையில், காபூலில் இருக்கும் Hamid Karzai விமானநிலையத்தை சுற்றி மக்கள் முகாமிவிட்டுவிட்டதால், அங்கு கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது.
இவர்கள் அனைவரும் தங்களுக்கு விமானத்தில் இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் உள்ளனர். ஆனால், விசா மற்றும் பாஸ்போர்ட் செல்ல செல்ல தகுதியானவர்களை மட்டுமே பாதுகாப்பு படையினர் அனுமதிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.