7 தமிழர்களையும் விடுதலை செய்யக் கூடாது! குடியரசு தலைவருக்கு கடிதம்: பிரபலம் வெளியிட்ட திடீர் பதிவு
ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்று பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்புவதாக கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தமிழர்கள் 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்று பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
I am sending a letter to the Rashtrapati to summarily reject Tamil Nadu CM Stalin's letter in which he asked for freeing seven LTTE criminals sentenced by SC for conspiring to kill Rajiv Gandhi through a suicide bomber at behest of LTTE. RG & 18 police persons died at the blast.
— Subramanian Swamy (@Swamy39) May 21, 2021
இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ராஜீவ்காந்தியை தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்ததாக உச்சநீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று நான் குடியரசுத் தலைவருக்கு நான் கடிதம் அனுப்புகிறேன்.
ராஜீவ்காந்தி மட்டுமல்லாது இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 18 பொலிசார் உயிரிழந்தனர். இதனால் இந்த சம்பவத்தில்,
ராஜீவ் காந்தி குடும்பம் மட்டுமே, குற்றவாளிகளை மன்னிப்பதற்கு முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.