ஜனாதிபதியிடமிருந்து பத்ம விருது பெற்ற 7 தமிழர்கள்
இன்று பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பத்ம விருதுகள் பெற்றுள்ளனர்.
2026 பத்ம விருதுகள்
கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, வர்த்தகம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் பத்ம விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என 3 விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். ஓவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதியன்று தமிழ்நாட்டை சேர்ந்த 14 பேர், புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 131 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், முதற்கட்டமாக இன்று ஜனாதிபதி மாளிகையில் 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண் மற்றும் 58 பத்மஸ்ரீ விருதுகள் உட்பட 66 பேருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்.

தமிழகத்தை 7 பேர் மருத்துவத் துறையில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் கல்லிப்பட்டி ராமசாமி பழனிசாமி, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள ஹெச்.வி.ஹண்டே ஆகியோர் விருது பெற்றனர்.

ஈரோட்டை சேர்ந்த எஸ்.கே.எம்.மயிலானந்தன், குடியுரிமைப் பணித்துறையை சேர்ந்த விஜய் குமார், இலக்கியம் மற்றும் கல்வித் துறையைச் சார்ந்த சிவசங்கரி, வானொலி ஒலிபரப்பு துறையில் சார்ந்த ஸ்ரீதர், கலைத்துறையில் சாதனை புரிந்தமைக்காக சுவாமிநாதன் ஆகியோர் விருது பெற்றுள்ளனர்.

மறைந்த பழங்குடியின ஓவியர் கிட்னா கிருஷ்னனுக்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மனைவி சுசீலா ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |