காசாவில் குவிக்கப்படும் 7000 ஹமாஸ் போராளிகள்: மீண்டும் அதிகரிக்கும் குழப்பம்
ஹமாஸ் அமைப்பினர் சுமார் 7000 போராளிகளை திரும்ப அழைத்துள்ளது.
காசாவில் மீண்டும் ஹமாஸ்
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் நேற்று நடைமுறைக்கு வந்த நிலையில் இரண்டாவது நாளாக போர் நிறுத்தம் அமுலில் உள்ளது.
போர் நிறுத்தத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் வடக்கு காசாவுக்கு திரும்பி வருகின்றனர்.
ஹமாஸ் ஆயுதங்களை கைவிடும் வரை காசாவை விட்டு முழுமையாக இஸ்ரேலிய படைகள் வெளியேறாது என இஸ்ரேலிய பிரதமர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்நிலையில் காசாவில் ஹமாஸின், போராளிகள் அணிதிரட்டல் இப்பகுதியின் எதிர்கால ஆட்சி குறித்த கவலையை சர்வதேச அளவில் அதிகரிக்க செய்துள்ளது.
7000 போராளிகளுக்கு அழைப்பு
வெளியான தகவல்களின் அடிப்படையில், காசாவில் மீண்டும் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதற்காக ஹமாஸ் சுமார் 7000 போராளிகளை திரும்ப அழைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் காசாவில் மீண்டும் வன்முறை மற்றும் தாக்குதல்கள் நடைபெறுமா என்ற அச்சம் எழத் தொடங்கியுள்ளது.
டிரம்பின் சமாதான ஒப்பந்தத்தில் போருக்கு பிந்தைய ஆட்சி குறித்த முடிவு ஒரு சிக்கலாகவே தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் உள்நாட்டு படைகள் காசாவில் குவிக்கப்படுவது அப்பகுதியின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற சூழ்நிலையை அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |