Vanuatu-ஐ உலுக்கிய சக்திவாய்ந்த பூகம்பம்... சுனாமி தாக்கும் அபாயம்! USGS எச்சரிக்கை
ஓசியானியா கண்டத்தில் அமைந்துள்ள தீவு நாடான Vanuatu-ல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Vanuatu போர்ட்-ஓல்ரி கடற்கரையில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதாக USGS எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலநடுக்கத்தால் Vanuatu-வில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.
Notable quake, preliminary info: M 6.8 - 16 km N of Port-Olry, Vanuatu https://t.co/a3jsBxUFoG
— USGS Earthquakes (@USGS_Quakes) August 18, 2021
கடந்த சனிக்கிழமை கரீபியன் தீவு நாடான ஹைட்டியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது.
ஹைட்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்த்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,941 ஆக உயர்ந்திருக்கிறது.
மேலும், காயமடைந்த 8,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்கை பெற்று வருகின்றனர்.