72 வயதில் தடகளத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற பெண்!
பிலிப்பைன்ஸில் நடந்த மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் 72 வயது பெண்ணொருவர் வெள்ளிப்பதக்கம் வென்று மிரட்டினார்.
72 வயது பெண்
22வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், பிலிப்பைன்ஸின் நியூ கிளார்க் சிட்டி மைதானத்தில் நடந்தன.
இதில் இந்தோனோஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர். அவர்களில் இந்திய மாநிலம் கேரளாவைச் சேர்ந்த இந்திரா தேவி என்ற 72 பெண்ணும் ஒருவர்.
80 மீற்றர் தடகள பந்தயத்தில் கலந்துகொண்ட இவர், 44.32 வினாடிகளில் இலக்கினை எட்டினார். இதன்மூலம் இந்திரா தேவி வெள்ளிப்பதக்கம் வென்று மிரள வைத்தார்.
ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இவர், தனது 65வது வயதில் கனவுகளை நோக்கி செல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார்.
சாதனை படைக்கும் தருணம்
அதன்படி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தொடங்கிய இந்திரா தேவி, கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த தடகளப் போட்டியில் 5வது இடத்தைப் பிடித்து அசத்தினார்.
இந்த நிலையில் தான் விடாமுயற்சியால் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். இதுகுறித்து இந்திரா தேவி கூறுகையில், 'குடும்பம் மற்றும் பிற பொறுப்புகளால் விளையாட்டிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து வந்தேன். ஆனால், இப்போது சாதனை படைக்கும் தருணம் வந்துள்ளது' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |