வயிற்றில் குழந்தையுடன் இறந்த இளம்பெண்.. 7,200 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சடலம்.. வெளியான முக்கிய தகவல்
இந்தோனேஷியாவில் 7200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பெண்ணின் மரபணு இன்று வரை அழியாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் சர்வேதேச ஆராய்ச்சியாளர்கள் தெற்கு சுலாவேசி என்ற பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். தெற்கு சுலாவேசி பகுதியில் வசித்து வந்தவர்களை டோலியன் மக்கள் என்று கூறுவார்கள்.
இந்நிலையில் ஆராச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் சுண்ணாம்பு குகை அருகே 17 அல்லது 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் மரபணுவை கண்டுபிடித்துள்ளனர். அந்த பெண் 7200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
அப்பெண்ணின் சடலத்தில் வயிற்றில் ஒரு குழந்தை படுத்திருப்பது போன்று இருப்பதால் அப்பெண் கர்ப்பமாக இருக்கும் போது உயிரிழந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகின்றது. அப்பெண்ணிற்கு ஆராய்ச்சியாளர்கள் பெஸ்கி என்று பெயர் சூட்டியுள்ளனர். மேலும் இது உலகத்தில் வேறு இடத்தில் கிடைக்கப்படாத பெண்ணின் எலும்புகளிலிருந்து புதிய மரபணு கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாகவே மண்ணில் சடலங்களை புதைக்கும் பொழுது அதனின் ஈரப்பதம், வெப்ப மாற்று நிலை போன்றவற்றால் DNA அழிந்துவிடும். ஆனால் சுமார் 7200 ஆண்டுக்கு பிறகும் இந்த பெண்ணின் மரபணு அழியாமல் இருப்பது ஆச்சரியமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.