ஆசிய நாடொன்றில் 76,000 பேருக்கு HIV பாதிப்பு! அதிர வைத்த அறிக்கை
கம்போடியா நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 4 பேர் HIV -யால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று அதிர்ச்சி அளித்துள்ளது.
தேசிய எய்ட்ஸ் ஆணையம் அறிக்கை
HIV வைரஸ் முதன் முறையாக அமெரிக்காவில் 1981ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இது உலகம் முழவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் HIV பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் தேசிய எய்ட்ஸ் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு ஒவ்வொரு நாளும் 4 பேர் HIV-யால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது.
@Reuters
ஆண்டுக்கு 1,400 பேர்
மேலும் அந்த அறிக்கையில், 'கம்போடியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 1,400 பேர் புதிதாக HIV-யினால் பாதிக்கப்படுகின்றனர்.
அத்துடன் HIV-யால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர் 15 முதல் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் ஆவர்.
இந்நாட்டில் தற்போது சுமார் 76,000 பேர் HIV-யுடன் வாழ்த்து வருகின்றனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மூத்த அமைச்சர் மற்றும் தேசிய எய்ட்ஸ் ஆணைய தலைவர் இங் மவுலி கூறுகையில், 'கம்போடியா ஒரு பொது சுகாதார அச்சுறுத்தலாக இருக்கும் AIDS-ஐ முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், 2025க்குள் 95-95 இலக்குகளை அடைவதற்கும் உறுதி பூண்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |