ரஷ்யாவின் அணு நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்கு அருகே 8.8 ரிக்டர் நிலநடுக்கம் - உக்ரைன் வெளியிட்ட தகவல்
ரஷ்யாவின் அணு நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்கு அருகே 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் 'ரிங் ஆஃப் ஃபயர்' என அழைக்கப்படும் பகுதியில் நிலநடுக்கங்கள் வழக்கமாகவே நிகழ்கின்றன.

சோவியத் காலத்தை விஞ்சும் ரஷ்யாவின் போர்கால தயார்நிலை - 1.1 டிரில்லியன் டொலரில் பிரம்மாண்ட ஆயுதத் திட்டம்
ஆனால், சமீபத்தில் ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம், சர்வதேச கவனத்தை ஈர்த்தது.
பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரத்திலிருந்து 150 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையமாக இருந்தது. அதற்குப் பின்னர், நான்கு மீட்டர் உயரம் கொண்ட சுனாமி அலைகள் சில கடற்கரை பகுதிகளை தாக்கின.
அணு தளத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதா?
உக்ரேனிய ஊடகங்கள், குறிப்பாக உக்ரைன் ஆதரவு ஊடகமான United24 Media, வில்யுசின்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் இரகசிய அணு நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கூறுகின்றன.
இத்தளம், ரஷ்யாவின் பசிபிக் கடற்படையின் முக்கியமான தளமாக இருக்கிறது. இங்கு அணு ஆயுதங்கள் ஏற்றிய நீர்மூழ்கிக் கப்பல்கள், அவற்றுக்கான கப்பல்துறை மற்றும் ஆயுத களஞ்சியங்கள் உள்ளன.
அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் - ஆபத்து அதிகம்
உதாரணமாக, K-44 Ryazan என்ற நீர்மூழ்கிக் கப்பல் மட்டும் 16 பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஒவ்வொன்றிலும் 3 அணுகுண்டுகள் ஏற்றிக்கொண்டு 6,000 கி.மீ தூரம் வரை தாக்கக்கூடிய திறன் கொண்டது.
அதேபோல், Alexander Nevsky, Vladimir Monomakh, Tomsk, Irkutsk போன்ற பல அணு நீர்மூழ்கிக் கப்பல்களும் இங்கு உள்ளன. இவை ரஷ்யாவின் அணு தடுப்புத் திட்டத்தின் மிகப்பாரிய பகுதி என கருதப்படுகின்றன.
இதுவரை, வில்யுசின்ஸ்க் தளத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மாஸ்கோவிலிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், சிறிய சேதமும் கூட பாதுகாப்பு ஆபத்துகளுக்கு வழிவகுக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia Kamchatka earthquake 2024, Vilyuchinsk nuclear submarine base, Russian Pacific Fleet quake damage, 8.8 earthquake tsunami Kamchatka, Russia nuclear warheads risk, Submarine base earthquake impact, Russian navy missile submarine, Petropavlovsk Kamchatka tsunami, United24 Media Russia claims, Russia earthquake military threat