கடல் ஆமையை உண்ட குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்
தான்சானியாவில் கடல் ஆமை இறைச்சியை உண்ட 8 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கடல் ஆமை
ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அமைந்துள்ள தீவு பெம்பா. இந்த தீவின் பன்ஸா பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர் கடல் ஆமை இறைச்சியை உண்டுள்ளனர்.
இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பெரியவர்கள் 78 பேர் நோய்வாய்ப்பட்டனர்.
மாதிரிகள்
இச்சம்பவம் அங்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில் மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,
'மருத்துவ ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகள் மூலம், கடல் ஆமை இறைச்சியை சாப்பிட்டதால் அவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
செவ்வாய்கிழமையே அவர்கள் இறைச்சியை உண்டுள்ளனர், ஆனால் தண்டிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை வரை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை' என என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |