ஆசிய நாடொன்றில் தீப்பற்றி எரிந்த குடியிருப்பு: ஒருமணிநேரத்தில் 8 பேர் உடல் கருகி பலி
பிலிப்பைன்ஸில் குடியிருப்பு கட்டிடத்தில் தீப்பற்றி எரிந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
நள்ளிரவு தீ விபத்து
மணிலா அருகே உள்ள குயிசான் புறநகர்ப் பகுதியில் சான் இசிட்ரோ காலஸ் என்ற கிராமம் உள்ளது.
இங்குள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று தளங்கள் கொண்ட கட்டிடத்தில் தீப்பற்றியதில் மளமளவென பரவியுள்ளது.
இதில் சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் உடனடியாக தீப்பற்றியதை உணரவில்லை என்று கூறப்படுகிறது.
[LGMWYI
8 பேர் பலி
மேலும் நாலாபுறமும் தீப்பற்றியதில் உள்ளே சிக்கிக் கொண்டவர்களில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
அவர்களில் 6 பேர் இரண்டாவது தளத்திலும், இருவர் தரைத்தளத்திலும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது தளத்தில் தீ பரவியதாக கூறப்படும் நிலையில், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |