அமெரிக்காவில் குடியேற காத்திருக்கும் 8 லட்சம் மக்கள்: தாலிபான்கள் கட்டுப்பாட்டால் விழிபிதுங்கும் ஆப்கானியர்கள்
தாலிபான்கள் ஆட்சிக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற 8 லட்சம் ஆப்கானியர்கள் காத்து இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தாலிபான் ஆட்சி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு தாலிபான்கள் கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது.
தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அவர்கள் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அடுக்கடுக்காக விதித்து வருகின்றனர்.
AFP/GETTY
அதிலும் குறிப்பாக பெண்களுக்கான கல்வி உரிமை மறுப்பு, வேலை வாய்ப்பு மறுப்பு மற்றும் ஆடை கட்டுப்பாடு போன்றவற்றை தாலிபான்கள் விதித்து வருகின்றனர்.
காத்திருக்கும் 8 லட்சம் பேர்
தாலிபான்கள் உடனான போர் தொடங்கிய பிறகு அமெரிக்க படைகளுக்கு உதவிய நபர்களுக்கு அமெரிக்காவில் குடியேற 2009ம் ஆண்டு சிறப்பு விசா வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
தாலிபான் தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் அமெரிக்காவில் குடியேற தீவிரமாக விண்ணப்பித்து வருகின்றனர்.
Associated Press
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கைப்படி, சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் ஆப்கானியர்கள் அமெரிக்காவில் குடியேற விண்ணப்பித்து சிறப்பு விசாவை பெற காத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.