சார்ஜர் வயரை கடித்த 8 மாத குழந்தை மின்சாரம் பாய்ந்து பரிதாப மரணம்
செல்போன் சார்ஜர் வயரை கடித்த 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சார்ஜர் வயரை கடித்த குழந்தை
செல்போனிற்கு ஜார்ஜ் போட்டுவிட்டு அதனை ஆஃப் செய்யாமல் போனதால் நிகழ்ந்த துயர சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் உத்தரகன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வாரை சேர்ந்த தம்பதியினர் கல்குட்கர் மற்றும் சஞ்சனா.
இவர்களுக்கு, சானித்யா என்ற 8 மாத குழந்தை உள்ளது.
இந்நிலையில், சஞ்சனா தனது வீட்டில் உள்ள மொபைல் போனிற்கு சார்ஜ் போட்டுவிட்டு, ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் சென்றுள்ளார்.
அப்போது. அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 மாத குழந்தையான சானித்யா சார்ஜர் வயரை கடித்துள்ளது, எதிர்பாராதவிதமாக வயரில் மின்சாரம் பாய்ந்து குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளது.
குழந்தை உயிரிழப்பு
உடனே, குழந்தையின் பெற்றோர் பதறிப்போய் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சார்ஜ் வயரில் மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தைகள் இருக்கும் இடத்தில் பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சார்ஜ் வயர்களிலோ, கேபிள் வயர்களிலோ, இன்டெர்ன்ட் வயர்களிலோ மின்சாரம் பாய்ந்து கொன்டே இருக்கும். அதை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். மேலும், மொட்டை மாடியில் போகும் வயரில் ஈரத்துணியை காய வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |