விலகாத சாபமும், அழியாத வரலாறும்! இந்தியாவின் திகிலூட்டும் 5 மர்மமான இடங்கள்
இந்தியா, வரலாறு மற்றும் கலாச்சாரம் நிறைந்த ஒரு நாடு, அதே சமயம் பல மர்மங்களால் சூழப்பட்ட இடங்களையும் கொண்டுள்ளது.
மர்மமான கிராமங்கள் முதல் வானியல் நிகழ்வுகள் வரை, இந்த இடங்கள் ஆய்வாளர்களையும் உள்ளூர்வாசிகளையும் நூற்றாண்டுகளாக கவர்ந்துள்ளன.
அந்த வகையில் இந்தியாவின் மிகவும் மர்மமான ஐந்து இடங்கள் குறித்து ஆராய்வோம்!
காந்த மலை-லடாக்(Magnetic Hill, Ladakh)
லடாக்கின் காந்த மலை லே கார்கில்- ஶ்ரீநகர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இந்த காந்த மலையானது அதன் மர்மமான புவி ஈர்ப்பு விசைக்காக அறியப்படுகிறது.
மலையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட்ட கார்கள் அல்லது வாகனங்கள் Neytral Gear-க்கு மாறி மலையின் மேல் நோக்கி உருளும்.
துமாஸ் கடற்கரை- குஜராத்(Dumas Beach, Gujarat)
குஜராத் மாநிலத்தின் துமாஸ் கடற்கரை "தற்கொலை கடற்கரை" என்று அழைக்கப்படுகிறது.
இந்த துமாஸ் கடற்கரை பேய்களால் சூழப்பட்டது என்று உள்ளூர்வாசிகள் மிகவும் நம்புகின்றனர்.
இது முன்பு இறுதி சடங்கு நடைபெறும் இடமாக இருந்ததுடன், அமானுஷ்ய தோற்றங்கள் மற்றும் மர்மமான கிசுகிசுக்கள் ஆகியவற்றை மனிதர்கள் உணர்ந்து இருப்பது இதன் மர்மத்தை அதிகரித்துள்ளது.
ஜாட்டிங்கா- அசாம்(Jatinga, Assam)
விசித்திரமான நிகழ்வுக்கு பெயர் பெற்ற ஜாட்டிங்கா அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும்.
இந்த ஜாட்டிங்கா கிராமத்தில் இடம்பெயர்ந்து வரும் பறவைகள் குறிப்பிட்ட மாதங்களில் கூட்டம் கூட்டமாக உயிரை மாய்த்துக் கொள்கின்றன. பல்வேறு இனங்களை சேர்ந்த பறவைகள் கூட கட்டிடங்கள், மரங்கள் மற்றும் மக்கள் மீது கூட மோதி உயிரை மாய்த்துக் கொள்கின்றன.
இதற்கு வானிலை நிலைமைகள் அல்லது புவிகாந்த புலத்தில் ஏற்படும் திடீர் மாறுபாடுகள் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கேட்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
கோடின்கி-கேரளா(Kodinhi, Kerala)
கேரளாவின் கோடின்கி என்ற சிறிய கிராமம், அதிகமாக இரட்டைப் பிறப்புகளின் எண்ணிக்கையை கொண்டு இருப்பதற்கு பெயர் பெற்றுள்ளது.
மரபணு காரணிகள், சுற்றுச்சூழல் தாக்கங்கள் அல்லது அறியப்படாத சக்தி ஆகியவை இணைந்து உள்ளூர் மக்கள் மற்றும் விஞ்ஞானிகளை அதிகமாக குழப்பியுள்ளன.
குல்தாரா- ராஜஸ்தான்(Kuldhara, Rajasthan)
கைவிடப்பட்ட குல்தாரா கிராமம் ஜைசல்மருக்கு அருகில் உள்ள பேய் கிராமம் என கூறப்படுகிறது.
கொடுங்கோன்மை அரசனின் அழிப்பில் இருந்து தப்பிப்பதற்காக இந்த கிராமத்தின் மக்கள் அனைவரும் ஒரு இரவில் காணாமல் போய்விட்டதாகவும், தங்கள் வீடுகளையும் பொருட்களையும் விட்டுவிட்டதாகவும் கதைகள் கூறுகின்றன.
அதே சமயம் குல்தாராவின் அச்சமூட்டும் அமைதி மற்றும் சிதைந்த கட்டமைப்புகள், சாபங்கள் ஆகியவை அமானுஷ்ய நிகழ்வுகளின் கதைகளைத் தூண்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |